இந்திய கிரிக்கெட் அணியை விமர்சித்த பிரபல ஜாம்பவான்: காரணம் இதுதான்

Report Print Raju Raju in கிரிக்கெட்

சர்வதேச அளவில் சிறந்த அணி என பெயரெடுக்க இந்திய அணி அந்நிய மண்ணில் சாதிக்க வேண்டியது அவசியம் என ஜாம்பவான் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதன் மூலம் இந்திய அணி சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் தொடர்களை வென்ற அணிகளில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியாவின் உலக சாதனைகளை சமன் செய்தது.

இதையடுத்து இந்திய அணி தான் சர்வதேச அளவில் மிகச்சிறந்த அணி என கோஹ்லிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இது குறித்து பேசிய இந்திய அணியின் ஜாம்பவான் கங்குலி, சர்வதேச அளவில் மிகச்சிறந்த அணி என பெயரெடுக்க கோஹ்லி தலைமையிலான இந்திய அணி அந்நிய மண்ணில் சாதிக்க வேண்டியதும் அவசியம்.

அதற்குள் எதுவும் சொல்ல முடியாது, கோஹ்லி சிறந்த தலைவர் என்றாலும், வாழ்நாளில் சிறந்த தலைவராக திகழ அந்நிய மண்ணில் அவர் நிரூபிக்க வேண்டிது, கட்டாயமாகும் என கூறியுள்ளார்.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்