தென் ஆப்பிரிக்க தொடரை இந்தியா கைப்பற்றும்: டிராவிட்

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

இந்திய மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கிடையிலான எல்லோராலும் பரவலாக எதிர்பார்க்கப்படும் டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றும் என்று முன்னாள் தலைவர் டிராவிட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் 40-50 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய அனுபவமுள்ளவர்கள்,இதுவரை இல்லாத அளவில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

உலகத்தரம்வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோரோடு சகலதுறை வீரர் ஹார்டிக் பாண்ட்யாவும் அணியில் இடம்பெற்றுள்ளார்.

துடுப்பாட்ட வீரர்களும் அணியில் நல்ல நிலையில் உள்ள காரணத்தால்,இதுவரை இல்லாதவாறு கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, தென் ஆபிரிக்க மண்ணில் டெஸ்ட் தொடரில் சாதிக்கும் என்றும் டிராவிட் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜனவரி மாதம் 5 ம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்