இந்திய கிரிக்கெட் வீரர் பும்ராவின் தாத்தா ஆற்றில் சடலமாக மீட்பு: தற்கொலையா?

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவின் தாத்தா ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதால், இது தற்கொலையா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் என்றழைக்கப்படும் பும்ரா குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். தற்போது இந்திய அணியில் நீக்க முடியாத வீரராக உள்ளார்.

இந்நிலையில் இவரின் தாத்தா சண்டோக் சிங் பும்ரா (84) சில மாதங்களுக்கு முன் பும்ராவை நான் இறப்பதற்குள் பார்த்துவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து இவர் கடந்த 1-ஆம் திகதி அகமதாபாத்தின் வஸ்தராபூர் பகுதியில் இருக்கும் பூம்ராவின் குடும்பத்தினரை பார்க்க சென்றுள்ளார்.

அதன் பின் கடந்த வெள்ளிக் கிழமை இரவு வீட்டை விட்டு வெளியேறிய இவர், வீடு திரும்பவில்லை என்பதால், அவரின் மருமகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதனால் இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், சபர்மதி ஆற்றின் கரையில் முதியவர் ஒருவரின் சடலம் ஒன்று ஒதுங்கியுள்ளதாக பொலிசாருக்கு தகவல் வந்துள்ளது.

இதைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார், ஆற்றில் ஒதுங்கிய முதியவர் குறித்து விசாரணை மேற்கொண்ட போது, அது பும்ராவின் தாத்தா என்பது தெரியவந்துள்ளது.

அவரது உடலை கைப்பற்றிய பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார், தற்கொலையா இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers