இந்த நூற்றாண்டின் சிறப்பான பந்துவீச்சு: மாயாஜாலம் செய்த வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் வீசிய ஒரு பந்து, இந்த நூற்றாண்டின் சிறப்பான பந்து வீச்சாக மாறியுள்ளது.

ஆஷஸ் தொடரின் 3வது டெஸ்ட் பெர்த் நகரில் நடைபெற்றது, அதன் நான்காவது நாளில் மிட்செல் ஸ்டார்க் ஒரு அதிசயத்தை நிகழ்த்தினார்.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர் ஜேம்ஸ் வின்ஸ், அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கின் பந்துவீச்சினை எதிர்கொண்டார்.

அப்போது, ஸ்டார்க் ‘Round the wicket' திசையிலிருந்து வீசிய பந்து, ஸ்விங் ஆகி Stump-ஐ பதம் பார்த்தது. 55 ஒட்டங்களில் ஆடிக் கொண்டிருந்த வின்ஸ், இந்த பந்தை சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்ன நடந்தது என்றே புரியாதவறே அவர் அவுட் ஆனார்.

143.9 கிலோ மீட்டர் வேகத்தில் வீசப்பட்ட இந்த பந்து, சிறப்பான முறையில் ஸ்விங் ஆனது. ஆனால், இது மிகவும் அபூர்வமான நிகழ்வாகும். ஏனெனில், பொதுவாக கிரீசின் ஓரத்தில் நின்று வீசப்படும் பந்துகள் ஸ்விங் ஆவது மிகவும் கடினம்.

ஸ்விங் செய்ய விரும்பும் பந்து வீச்சாளர்கள், ஸ்டம்பை ஒட்டினாற்போல் நின்று தான் எப்போதும் பந்து வீசுவர். ஆனால், ஸ்டார்க் வீசிய பந்து ‘pitch' ஆன பிறகு லெக் திசையில் தான் சென்றிருக்க வேண்டும்.

மாறாக, லெக் திசையை நோக்கி வீசப்பட்ட பந்து, ஆப் திசையில் ஸ்விங் ஆகி 'Stump’-ஐ தாக்கியது. எனவே தான், இந்த மாயாஜால பந்துவீச்சை 21ஆம் நூற்றாண்டின் சிறந்த பந்து வீச்சாக கிரிக்கெட் வல்லுநர்கள் வர்ணித்துள்ளனர்.

மேலும், இந்த சாதனை பந்து வீச்சு குறித்து, இங்கிலாந்தின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கிரேம் ஸ்வான் கூறுகையில், ‘ஸ்டார்க்கின் இந்த பந்து வீச்சு டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கர் போன்றோரை கூட 1000 முறை ஆட்டமிழக்க செய்து விடும். இது எதிர்கொள்ள முடியாத பந்துவீச்சு’ என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கூறுகையில், ‘இந்த பந்து வீச்சு தன்னுடைய சிறந்து பந்து வீச்சு நாட்களை நினைவுபடுத்துகிறது. மேலும், இடது கை வேகப்பந்து வீச்சாளர்களை ஸ்டார்க் பெருமைபடுத்தியுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.

சென்ற நூற்றாண்டின் சிறந்த பந்து வீச்சையும் அவுஸ்திரேலிய வீரர் ஒருவரே நிகழ்த்தினார். முன்னாள் நட்சத்திர வீரரான சுழற்பந்து வீச்சாளர் ஷேன் வார்னே, 1993ம் ஆண்டு ஜூன் 4ஆம் திகதி ஆஷஸ் தொடரில் இதே போன்ற சாதனையை நிகழ்த்தினார்.

Old Trafford மைதானத்தில், ஷேன் வார்னே லெக் ஸ்டெம்புக்கு வெளியே பந்தை வீசினார். அது சுழன்று வந்து ஆப் ஸ்டெம்பை தாக்கியதால் மைக் கட்டிங் அவுட் ஆனார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers