இந்தாண்டு மட்டும் இலங்கை அணி எத்தனை போட்டியில் தோற்றது தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

2017-ஆம் ஆண்டில் இலங்கை கிரிக்கெட் அணி அடைந்துள்ள மொத்த வெற்றிகள் மற்றும் தோல்விகளின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி இந்தாண்டு தொடக்கம் முதலே மிக மோசமாக செயல்பட்டு வருகிறது.

ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள், டி20 போட்டிகள் என அனைத்து வடிவங்களிலும் இலங்கை அணியின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை.

இந்நிலையில், Island Cricket என்ற இலங்கை கிரிக்கெட் குறித்து தகவல் தரும் இணைய பக்கத்தின் நிர்வாகி அலெக்சாண்டர் இலங்கை அணி 2017-ல் பெற்ற மொத்த வெற்றிகள் மற்றும் தோல்விகள் குறித்து பதிவிட்டுள்ளார்.

அதன்படி இலங்கை அணி இந்தாண்டு மொத்தம் 57 போட்டிகளில் விளையாடியுள்ளது.

இதில் வெறும் 14 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

40 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது, 2 போட்டிகள் டிரா ஆன நிலையில், ஒரு போட்டியின் முடிவு வெளியாகவில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்