ரோஹித் சர்மாவின் வெற்றியின் ரகசியம் இதுதானாம்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ரோஹித் சர்மா தனது வெற்றியின் ரகசியம் குறித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

இந்திய அணி, இலங்கைக்கு எதிரான டி20 தொடரையும் 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது, இந்த வெற்றிக்கு ரோஹித் சர்மாவின் பங்கு மிக அதிகம்.

அவரின் அதிரடியான ஆட்டம் இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்கிறது. கடந்த இரண்டாவது டி20 போட்டியில் விளையாடிய ரோஹித் சர்மா அபாரமாக ஆடி சதமடித்தார்.

ரோஹித்தின் ஆட்டத்தினை காண, அவரின் மனைவி ரித்திகா சஜ்தே களத்திற்கு வருகிறார்.

இதுகுறித்து ரோஹித் சர்மா கூறுகையில், ‘பொதுவாக யாருக்காவது பிறந்த நாள் வந்தால், நாம் அவரோடு நேரத்தை செலவிடுவோம்.

ஆனால், என் மனைவி விஷயத்தில் அப்படி இல்லை. நாங்கள் கிரிக்கெட்க்கு செல்லும் பயணங்களில் மட்டும்தான் நேரத்தை செலவிடுகிறோம். இப்படி ஒரு மனைவி அமைந்ததற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.

ரித்திகா மைதானத்திற்கு வந்தால், ரோஹித் சர்மா சிறப்பாக விளையாடுகிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

அதேபோல மூன்றாவது டி20 போட்டிக்கு முன் ரித்திகா, ‘என் அதிர்ஷ்டகாரா வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

தற்போது இதுதான் ரோஹித்தின் வெற்றியின் ரகசியம் என்று அவரது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்