36 வயதான டோனியின் உடல்தகுதி எப்படி உள்ளது? பயிற்சியாளர் பேட்டி

Report Print Raju Raju in கிரிக்கெட்

டோனிக்கு 36 வயதாகியும் கூட, 26 வயதான வீரர்களால் உடற்தகுதியில் அவரை தோற்கடிக்க முடியாது என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் டோனி ஓய்வு பெற வேண்டும் என சிலர் விமர்சனங்கள் வைத்து வருகிறார்கள்.

இது குறித்து பேசிய இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இந்திய அணியில் டோனி வகிக்கும் விக்கெட் கீப்பர் பொறுப்பை வேறு எந்த வீரரையும் கொண்டு நிரப்ப முடியாது.

அவருக்கு 36 வயதாகியும் கூட, 26 வயதான வீரர்களால் உடற்தகுதியில் அவரை தோற்கடிக்க முடியாது.

மற்ற வீரர்கள் இரண்டு ஓட்டங்கள் ஓடி எடுப்பதற்குள் டோனி மூன்று ஓட்டங்கள் எடுத்து விடுவார்

அவரை விமர்சிப்பவர்கள் 36 வயதில் தாங்கள் எப்படி இருந்தோம் என்பதை கண்ணாடி முன் நின்று பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்