ஜடேஜாவின் ஆறு சிக்ஸர் சாதனையை சமன் செய்த பாகிஸ்தான் வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் ஆறு பந்துகளில் 6 சிக்ஸர்கள் அடித்து இந்திய வீரர் ஜடேஜாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

பாகிஸ்தானின் பைசலாபாத் நகரில் தொண்டு நிறுவன டி10 கிரிக்கெட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. இதனை பாகிஸ்தானின் முன்னாள் வீரர் சாகித் அப்ரிடி நடத்துகிறார்.

பாகிஸ்தானின் துடுப்பாட்ட வீரர் சோயிப் மாலிக், சாகித் அப்ரிடி பவுண்டேஷன் ரெட் அணிக்காக விளையாடினார்.

அந்த ஆட்டத்தில் சாகித் அப்ரிடி பவுண்டேஷன் கிரீன் அணி சார்பில், பாபர் அஸாம் ஏழாவது ஒவரை வீசினார்.

அந்த ஒவரை எதிர்கொண்ட மாலிக், தான் சந்தித்த ஆறு பந்துகளையும் சிக்ஸர்களாக மாற்றினார். இதன்மூலமாக 50 ஓவர்களுக்கு குறைவான போட்டிகளில், ஒரே ஒவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர், ரவீந்திர ஜடேஜாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்