வாஷிங்டன் சுந்தரை உற்சாகப்படுத்திய அந்த வார்த்தை

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரை, ‘பிந்தாஸ்’ என்னும் வார்த்தை மிகவும் உற்சாகப்படுத்தியதாக அவரே தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அறிமுகமானார்.

தனது முதல் போட்டியில் விளையாடிய சுந்தர், ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். அதன் பின்னர், உடல் நிலை குறைபாட்டால் அடுத்தடுத்த போட்டிகளில் வாஷிங்டன் சுந்தரால் விளையாட முடியாமல் போனது.

எனினும், இலங்கை அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில், அவர் அறிமுக வீரராக களமிறங்கினார். இது குறித்து வாஷிங்டன் சுந்தர் கூறுகையில்,

‘டி20 போட்டியில் ஆடியதும் மகிழ்ச்சி அளிக்கிறது. மொகாலியில் நடந்த ஒருநாள் போட்டியில் விளையாடிய போது, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அவர்கள் என்னிடம் ‘பிந்தாஸாக’(கவலையில்லாமல்) விளையாடு என்று கூறினார்.

இரண்டு வார காலத்தில் அந்த வார்த்தையை, அவர் ஆறேழு முறையாவது பயன்படுத்தியிருப்பார். மேலும், ஆட்டத்தினை ரசித்து ஆடு என்றும், உன் மேல் நம்பிக்கை வை என்றும் என்னை அவர், உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தார்.

டோனி போன்ற மூத்த வீரர்களுடன், உடைமாற்றும் அறையில் பேசிக் கொண்டிருக்கும் கனவு எனக்கு பலித்தது. இந்த சிறுவயதிலேயே அது நிறைவேறியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

உணவு ஒவ்வாமை காரணமாக, விசாகப்பட்டினத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் என்னால் ஆட முடியாமல் போனது. இல்லையெனில் அந்த மைதானத்தில் நான் சிறப்பாக ஆடியிருப்பேன்.

நான் களமிறங்கிய இரண்டு போட்டிகளிலும், எனக்கு துடுப்பாட்ட வாய்ப்பு கிடைக்கவில்லை. எனினும், அடுத்தடுத்தப் போட்டிகளில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers