உலக கிண்ண தொடருக்கான இலங்கை அணித்தலைவர் பெயர் அறிவிப்பு

Report Print Raju Raju in கிரிக்கெட்
610Shares

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கிண்ண தொடரில் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவராக கமிண்டு மெண்டீஸ் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடரானது 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது.

இடது கை சுழற்பந்து வீச்சாளரான மெண்டீஸ், திறமையான துடுப்பாட்ட வீரரும் ஆவார்.

கடந்த 2016-ல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலக கிண்ண தொடரிலும் விளையாடியுள்ள மெண்டீஸ் அதில் 156 ஓட்டங்கள் எடுத்ததோடு ஐந்து விக்கெட்களும் வீழ்த்தியிருந்தார்.

ஜனவரியில் நடக்கும் உலக கிண்ண தொடரில் இலங்கை அணி ’டி’ பிரிவில் பாகிஸ்தான், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளோடு இடம்பெற்றுள்ளது.

இலங்கை அணி வீரர்கள் விவரம் வருமாறு,

கமிண்டு மெண்டீஸ் (தலைவர்) தனஞ்செய லக்சன், சன்துஸ் குணதிலக, ஹசித பொயகோட, நவனிடு பெர்ணாண்டோ, நிபுன் தனஞ்செய, அஷன் பந்தரா, கிஷன் சஞ்சுலா, நிஷன் மதுஷ்க, ஜிஹன் டேனியல், பிரவீன் ஜெயவிக்ரம, திஷாரு ராஷ்மிக, கலான பெரேரா, நிபுன் மலிங்க, ஹரேன் புடிலா.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்