இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட சந்திக்க ஹத்துருசிங்க இலங்கை வீரர்களுக்கு பயிற்சி வழங்கும் இப்படி அமையும் என்பது பலரதும் எதிர்பார்ப்பாகும்.
2017 இல் மோசமான தோல்விகளை தழுவியுள்ள இலங்கை அணிக்கு, புதிய பயிற்சியாளராக ஹத்துருசிங்க நியமிக்கப்பட்டமை மிகப்பெரிய எதிர்பார்ப்புக்களை ரசிகர்களுக்கு தோற்றுவித்துள்ளது.
இந்தநிலையில் வரும்வாரமளவில் பங்களாதேஷுக்கான சுற்றுலாவை மேற்கொள்ளவுள்ள இலங்கை அணி, அங்கு இரு டெஸ்ட் போட்டிகளிலும், பங்களாதேஷ், சிம்பாவே , அணிகள் பங்கேற்கும் முக்கோண தொடரிலும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனைமுன்னிட்டு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பயிற்சிகளின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேள்விகளுக்கு ஹத்துருசிங்க பதிலளித்தார்.
அதனடிப்படையில் பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியாவின் சிட்னி தண்டர் அணிகளுக்கு பயிற்சிகளின் போது ஒத்துழைப்பு நல்கிய ஆஸ்திரேலிய பிரிஸ்பேனை சேர்ந்த உளவியலாளர் Dr.பில் அவர்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இலங்கை அணியை வளப்படுத்தி எடுப்பதற்கு அவரது உளவியல் உந்துதல் காரணமாக அமையும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.