மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

Report Print Kabilan in கிரிக்கெட்
149Shares
149Shares
ibctamil.com

உலக அளவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் எதிர்காலத்தில் போட்டிகள் நடத்த முடியாமல் போகும் நிலை உருவாகியுள்ளது.

மிகவும் சிறப்பு வாய்ந்த மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஆஷஸ் தொடரின் நான்காவது போட்டி நடைபெற்றது.

போட்டியின்போது Pitch ஆனது துடுப்பாட்டத்திற்கும் சாதகமாக இல்லாமலும், பந்துவீச்சுக்கும் சாதமாக இல்லாமலும் இருந்ததாக வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்போட்டியின் நடுவர் ரஞ்சன் மதுகலே மைதானத்தினை ஆய்வு செய்தார்.

அவர் கூறுகையில், பொதுவாக ஒரு மைதானம், டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலிருந்து கடைசி நாளுக்கு வரும்போது, கொஞ்சம் கொஞ்சமாக அதன் தன்மையை இழக்கும்.

ஆனால், ஆஷஸ் நான்காவது போட்டியின் போது, மைதானமானது ஒரே நிலையில் சீராக இருந்துள்ளது.

இதன் காரணமாக துடுப்பாட்ட வீரர்களுக்கும் சாதகமாக இல்லாமல், பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாக இல்லாமல் மைதானம், ஒரே மாதிரியாகவே இருந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து 14 நாட்களில் இதுகுறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பதில் கூற வேண்டும் என ஐ.சி.சி கூறியுள்ளது.

இதற்கு அவுஸ்திரேலியா தரப்பில் சரியான விளக்கம் தராவிடில்,மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடத்தப்படுவதற்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்