இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் இவர் தான்

Report Print Kabilan in கிரிக்கெட்
114Shares
114Shares
ibctamil.com

இலங்கை விமானப்படை அதிகாரி ரோஷன் பியன்வில, அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் வாரியம் செயலாளர் பதவிக்கு ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையும் ராணுவப்படை, கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் இருந்து, சுழற்சி முறையில் ஒரு அதிகாரியை தெரிவு செய்வது வழக்கம்.

அதேபோல இம்முறை, விமானப்படை அதிகாரியான ரோஷன் பியன்விலவை தெரிவு செய்துள்ளது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

தற்போதைய செயலாளர் மோகன் டி சில்வாவிற்கு பதிலாக தெரிவு செய்யப்பட்டுள்ள ரோஷனின் பெயர், வரும் 7ஆம் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.

பியன்வில, பல உயரிய பதவிகளை ஏற்க மறுத்த பின்னரே, அவரை செயலாளாரக வாரியம் தெரிவு செய்துள்ளது.

வாரியத்தில் பல முதன்மை அதிகாரிகள் இருப்பதனால், பியன்வில தனது பணியை சுதந்திரமாக செய்வதில் சிக்கல் இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்