முதல் டெஸ்டில் இந்தியா பந்து வீச்சு: பும்ரா அறிமுகம்- ரோகித் உள்ளே, ரகானே வெளியே!

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
240Shares
240Shares
ibctamil.com

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் கேப் டவுனில் இன்று தொடங்கியது. இதில் தென்ஆப்பிரிக்கா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதனால் இந்தியா முதலில் பந்து வீசுகிறது.

ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் அபாரமாக விளையாடி வரும் பும்ரா, முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி பிசிசிஐ-யின் டெஸ்ட் தொப்பியை வழங்கினார். இந்திய அணிக்காக விளையாடும் 290-வது டெஸ்ட் வீரர் இவராவார்.

துணைக் கேப்டன் ரகானேவிற்கு இடம் கிடைக்கவில்லை. ரோகித் சர்மா அணியில் இடம்பிடித்துள்ளார். ஹர்திக் பாண்டியாவுடன் இந்தியா ஐந்து பேட்ஸ்மேன்களுடன் விளையாடுகிறது.

இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. தவான்

2. முரளி விஜய்

3. புஜாரா

4. விராட் கோலி

5. ரோகித் சர்மா

6. ஹர்திக் பாண்டியா

7. சகா

8. அஸ்வின்

9. பும்ரா

10. மொகமது ஷமி

11. புவனேஷ்வர் குமார்.

தென்ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. டீன் எல்கர்

2. மார்கிராம்

3. அம்லா

4. டி வில்லியர்ஸ்

5. டு பிளிசிஸ்

6. குயின்டான் டி காக்

7. பிலாண்டர்

8. கேஷப் மகாராஜ்

9. ஸ்டெயின்

10. மோர்னே மோர்கல்

11. ரபாடா.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்