இந்தியாவிடம் இருந்து இதை கற்றுக் கொள்ள வேண்டும்: பாகிஸ்தான் வீரர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இருந்து வீரர்களை தேர்வு செய்யும் முறையை பாகிஸ்தான் தேர்வாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் வீரர்களான சல்மான் பட் மற்றும் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளனர்.

சல்மான் பட் மற்றும் கம்ரான் அக்மல் ஆகிய இருவரும் பாகிஸ்தான் அணிக்கு நேற்று தேர்வு செய்யப்பட்டனர்.

சல்மான் பட் கூறுகையில், சர்வதேச கிரிக்கெட்டை விளையாட வீரர்களை அனுமதிப்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதிபாட்டைக் கொண்டுள்ளது.

ரோஹித் சர்மாவின் துடுப்பாட்ட சராசரி ஒரு கட்டத்தில் 25 முதல் 30க்குள் தான் இருந்தது.

ஆனால் இந்திய அணி தேர்வாளர்கள் அவருக்கு நிலையான வாய்ப்பினை வழங்கியதால், இன்று அவர் உலகத் தரம் வாய்ந்த சிறந்த வீரராக மாறியுள்ளார் என தெரிவித்துள்ளார்.

மேலும் மற்றொரு பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் கூறுகையில், நீங்கள் வீரர்களை உள்ளூர் போட்டிகளில் விளையாடி, தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.

அது தான் சர்வதேச அளவில் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்துவதற்கான நம்பிக்கையையும், வாய்ப்பையும் அவர்களுக்கு கொடுக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers