ஸ்மித்தை புகழ்ந்த கம்மின்ஸ்

Report Print Samaran Samaran in கிரிக்கெட்

ஸ்மித்தின் திறமைகளே தங்களுடைய வெற்றிகளை சாதகமாக்கியது என்று அவுஸ்ரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆஷஸ் தொடரின் ஐந்தாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நேற்று முன்தினம் சிட்னி மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்றுவருகின்றது. இந்நிலையில் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில், இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது, முக்கியமான போட்டிகளில் ஸ்டீவ் ஸ்மித் மிகவும் திறமையாக விளையாடுவதாக தெரிவித்த கம்மின்ஸ், பிறிஸ்பேன் மற்றும் பேர்த் டெஸ்ட்களின் வெற்றியும், மெல்பேர்ன் டெஸ்ட்டின் சமனிலையும் ஸ்மித்தாலேயே சாத்தியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், 'ஸ்மித்தின் ஆட்டநுணுக்கங்கள் வித்தியாசமானவை. அவுஸ்ரேலியாவுக்கு ஸ்மித்தின் முக்கியத்துவம் அவர் பெறும் ஓட்டங்களால் மாத்திரமல்ல. முக்கியமான இன்னிங்களில் அவர் பெறும் ஓட்டங்களில் தான் தங்கியுள்ளது' என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers