இந்திய அணியால் ஹோட்டலுக்கு ஓடப்பார்த்த தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்திய அணியின் பந்து வீச்சைக் கண்டு தென் ஆப்பிரிக்கா பயிற்சியாளர் ஹோட்டலுக்கு செல்ல முடிவெடுத்துவிட்டதாக கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் இந்திய பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் 286 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 28 ஓட்டங்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் துடுப்பாட்ட பயிற்சியாளர் டேல் பென்கென்ஸ்டேன், நல்லவேளை, எங்கள் செல்போன்களை வாங்கியிருந்தார்கள். இல்லையெனில் யூபர் டாக்ஸியை அழைத்து ஹோட்டலுக்கு சென்றிருப்பேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து கூறுகையில், முதல் டெஸ்ட் போட்டியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. அதிலும் குறிப்பாக புவனேஸ்வர் குமார் தன்னுடைய சிறப்பான பந்து வீச்சின் மூலம் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் யூபர் டாக்ஸியை அழைத்து ஹோட்டலுக்குச் சென்றுவிடலாம் என இருந்தேன். தரமான பந்துவீச்சை இந்திய வீரர்கள் வெளிப்படுத்தினார்கள்.

எப்படி தான் ஓட்டங்கள் எடுக்கப் போகிறோம் என்று இருந்தேன், அதன் பின் டிவில்லியர்ஸ் மற்றும் டுபிலிசிஸ் சிறப்பான ஆட்டத்தை கொடுத்து எங்களை மீட்டுவிட்டனர்.

டிவில்லியர்ஸ் ஒரே ஓவரில் தொடர்ந்து நான்கு பவுண்டரிகள் விளாசியதால் ஆட்டத்தின் போக்கே மாறிவிட்டது, இந்திய பந்து வீச்சாளர்கள் தங்களை யோசிக்க வைத்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers