பதவி நீட்டிப்பை நிராகரித்த இலங்கை கிரிக்கெட் வாரியத்தலைவர்: காரணம் என்ன?

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் திலங்கா சுமதிபாலா அவருடைய பதவிக்காலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கக் கோரி உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்க மறுத்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட்டின் மேற்கு மாகாண உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தற்போதைய வாரியத் தலைவர் சுமதிபாலாவின் பதவிகாலத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிப்பதை ஏற்றுக் கொள்ளும்படி, சங்க உறுப்பினர்கள் அவரை கேட்டுக்கொண்டனர்.

ஆனால், தனது தனிப்பட்ட காரணங்களால் சுமதிபாலா அதனை ஏற்க மறுத்துவிட்டார். பொதுவான விளையாட்டு விதிகளின்படி, தலைவர் பதவிக்காலம் 4 ஆண்டுகள் ஆகும்.

ஆனால், இலங்கை கிரிக்கெட் வாரிய அரசியலமைப்பின்படி 2 ஆண்டுகள் மட்டுமே ஆகும். அதன் காரணமாகவே, சுமதிபாலா தனது பதவிக்காலத்தை நீட்டிக்க மறுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் மே மாதம் 26ஆம் திகதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்