ரஹானேவுக்கு பதிலாக ரோஹித்தை தெரிவு செய்தது ஏன்? கோஹ்லி விளக்கம்

Report Print Kabilan in கிரிக்கெட்
367Shares
367Shares
lankasrimarket.com

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் அஜிங்கயா ரஹானேவுக்கு பதில் ரோஹித் சர்மாவை தெரிவு செய்ததற்கான காரணத்தை விளக்கியுள்ளார் கோஹ்லி.

நேற்று நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

முதல் இன்னிங்ஸ் ஹர்த்திக் பாண்டியா அடித்த 93 ஓட்டங்களைத் தவிர, எந்த வீரரும் பெரியளவில் ஓட்டங்கள் குவிக்கவில்லை.

இந்நிலையில் துடுப்பாட்ட வீரர் அஜிங்கயா ரஹானேவைத் தெரிவு செய்யாதது குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

இதுகுறித்து அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், ரோஹித் சர்மா கடைசியாக பங்கேற்ற மூன்று போட்டிகளில், அதிக ஓட்டங்களை குவித்திருந்தார். இலங்கைத் தொடரிலும் கூட அவரின் துடுப்பாட்டம் சிறப்பாக இருந்தது.

அதன் காரணமாகவே நாங்கள் ரோஹித் சர்மாவை தென் ஆப்பிரிக்கத் தொடருக்கு தெரிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்