புலிக்கு பிறந்தது பூனையாகுமா? சதமடித்து அசத்திய டிராவிட் மகன்

Report Print Gokulan Gokulan in கிரிக்கெட்
302Shares
302Shares
ibctamil.com

14 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் ராகுல் டிராவிட்டின் மகன் சதமடித்து அசத்தினார்.

கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் பள்ளிகளுக்கிடையேயான 14-வயதுக்குட்ட சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான THE WALL என அழைக்கப்படும் ராகுல் டிராவிட்-ன் மகன் சமித்(12 வயது) மல்லையா அதிதி சர்வதேச பள்ளி அணியின் சார்பில் இடம்பெற்று அசத்தினார்.

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? என்ற பழமொழிக்கு ஏற்றார்போல், நேற்று நடைபெற்ற போட்டியில் விவேகானந்தா பள்ளியும், மல்லையா அதிதி சர்வதேச பள்ளியும் மோதியபோது, ராகுல் டிராவிட்டின் மகன் சமித் அதிரடியாக விளையாடி 150 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார்.

அதே தருணம் இன்னொரு ஆச்சர்யம் என்னவென்றால், முன்னாள் இந்திய சுழல் பந்துவீச்சாளரான சுனில் ஜோஷியின் மகன் ஆர்யன் ஜோஷியும் இந்த போட்டியில் கலந்து 154 எடுத்து அசத்தினார்.

இதுதவிர இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த 14- வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியிலும் அவர் 125 ஓட்டங்கள் அடித்துள்ளார்.

மேலும், 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற 12-வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் தொடரில் மூன்று அரைசதம் (77, 93, 77) அடித்து அசத்தினார்.

அப்போது அவருக்கு 9 வயது தான் என்பது அவரது வருங்காலத்தை சித்தரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்