இலங்கை இன்னும் தோற்காத அணி: இலங்கை வீரரின் வைரல் டுவீட்

Report Print Raju Raju in கிரிக்கெட்
425Shares
425Shares
ibctamil.com

இலங்கை கிரிக்கெட் அணி பற்றி அந்த அணியின் முன்னாள் வீரர் ருசல் அர்னால்ட் பதிவிட்ட டுவீட் வைரலாகியுள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி சமீபகாலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. அதிலும் கடந்த 2017-ஆம் ஆண்டு மிக அதிகமான தோல்விகளை அந்த அணி சந்தித்தது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் ருசல் அர்னால்ட் டுவிட்டரில் எப்போதும் தனது கருத்துக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அவரின் சமீபத்திய டுவிட்டர் பதிவில், 2018-ல் இதுவரை தோற்காத சில அணிகளில் இலங்கையும் ஒன்று என பதிவிட்டுள்ளார்.

அதாவது, 2018-ஆம் ஆண்டு தொடங்கி சில நாட்களே ஆகியுள்ள நிலையில் கிண்டலாக இந்த டுவீட்டை அர்னால்டு பதிவு செய்துள்ளார்.

இதற்கு ரசிகர்களும் கிண்டலாக பதிலளித்து டுவீட் செய்து வருகிறார்கள்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்