இந்திய வீரர்களுக்கு ஷேவாக்கின் யோசனை

Report Print Kabilan in கிரிக்கெட்
427Shares
427Shares
ibctamil.com

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் வீரேந்திர சேவாக், தென் ஆப்பிரிக்காவில் விளையாடி வரும் இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு யோசனை கூறியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி, முதல் டெஸ்ட் போட்டியில் மோசமான தோல்வியைச் சந்தித்தது.

பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டிருந்தாலும், துடுப்பாட்ட வீரர்கள் சொதப்பியதே இதற்கு காரணமாகும்.

இந்நிலையில் வீரேந்திர சேவாக், தென் ஆப்பிரிக்க தொடர் குறித்து தொலைக்காட்சி ஒன்றில் கூறுகையில், ‘ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியில் செல்லும் பந்துகளைத் தொடாமல் இருப்பதே, இந்திய துடுப்பாட்ட வீரர்களுக்கு சிறந்த ஆலோசனையாகும்.

அவர்கள் முடிந்தவரை நேர்திசையில் ஆட முயல வேண்டும், அதேபோல் அதிரடி காட்டுவதற்கு ‘Straight' மற்றும் ‘Flick' வகை ஷாட்களையே தேர்வு செய்ய வேண்டும்.

Short Pitch பந்துகள் உங்களைப் பதம் பார்க்கலாம், அதற்குத் தயாராக இருந்து கொள்ளுங்கள், தென் ஆப்பிரிக்க ஆடுகளங்களில் பந்துகள் மேலெழும்ப தொடங்கியிருக்கிறது என்பதால், துடுப்பாட்ட வீரர்கள் ‘Bold' முறையில் ஆட்டமிழப்பது கடினம்.

எனவே, இந்தச் சிந்தனையை நேர்மறையாக எடுத்துக் கொண்டு, ஒவ்வொரு ஓவரிலும் குறைந்தது 3 ஓட்டங்களையாவது துடுப்பாட்ட வீரர்கள் சேர்க்க வேண்டும். இந்தத் தொடரில், இந்திய அணி மீண்டு வருவதற்கு 30 சதவிதமே வாய்ப்புகள் இருக்கின்றன’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்