வைரலாகும் ராகுல் டிராவிட்டின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்
129Shares
129Shares
ibctamil.com

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட், U-19 இந்திய அணியுடன் தனது 44-வது பிறந்தநாளை கொண்டாடிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் முன்னாள் ஜாம்பவான் ராகுல் டிராவிட், இந்திய அணிக்காக விளையாடி பல சாதனைகளை படைத்துள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 12,000 ஒட்டங்களுக்கு மேல் குவித்திருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 210 கேட்சுகள் பிடித்த ஒரே பீல்டர் என்ற சாதனையையும் ராகுல் டிராவிட் படைத்துள்ளார்.

தற்போது இந்திய ஏ அணி மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், நியூசிலாந்தில் ஜனவரி 14ஆம் திகதி தொடங்க உள்ள 19 வயதிற்குட்பட்டோருக்கான, உலக கிண்ணத் தொடர் நடைபெற உள்ளது. அதற்கான இந்திய அணியுடன் டிராவிட்டும் நியூசிலாந்து சென்றுள்ளார்.

நேற்றைய தினம், டிராவிட்டிற்கு பிறந்தநாள் என்பதால், U-19 அணி வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் துணைப் பயிற்சியாளர்கள் ஆகியோர் முன்னிலையில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார்.

மேலும், ஐசிசி, பிசிசிஐ மற்றும் சக வீரர்கள் என பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்