தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்தியாவை விட இலங்கை தான் பெஸ்ட்: அடித்து கூறும் புள்ளி விவரம்

Report Print Santhan in கிரிக்கெட்
689Shares
689Shares
ibctamil.com

தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி துடுப்பாட்ட வீரர்களை விட, இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்தித்தது.

இதனால் தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி திணறி வருகிறது. அதுமட்டுமின்றி நடைபெற்று முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் டாப் ஆர்டரில் இறங்கி விளையாடும் வீரர்கள் சொதப்பினர்.

முரளி விஜய் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து 13 ஓட்டங்களும், தவான் இரண்டு இன்னிங்சிலும் 16 ஓட்டங்களும்,

3-வது வீரரான புஜாரா முதல் இன்னிங்சில் 26 ஓட்டங்களும், 2-வது இன்னிங்சில் 4 ஓட்டங்களும் என மொத்தம் 30 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா மண்ணில் கடந்த 8 ஆண்டுகளாக டாப் ஆர்டர் வீரர்களின் புள்ளி விவரம் தெரியவந்துள்ளது.

அதில் கடந்த 2010-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து தற்போது வரை தென் ஆப்பிரிக்கா மண்ணில் விளையாடும் வீரர்களில் டாப் ஆர்டரில் முதல் மூன்று வீரர்களின் சராசரியைப் பார்த்தால், இந்தியா, அவுஸ்திரேலியா போன்ற அணிகளை எல்லாம் இலங்கை பின்னுக்கு தள்ளியுள்ளது.

அந்த வகையில் இலங்கை அணி 38.50 ஓட்டங்களும், அவுஸ்திரேலியா 36.92, நியூசிலாந்து 36.12, இந்தியா 34.20, இங்கிலாந்து 34.09, மேற்கிந்திய தீவு 34.08 ஓட்டங்களும் எடுத்துள்ளது.

அது ஏன் சொந்த மண்ணில் விளையாடிய தென்ஆப்பிரிக்காவின் சராசரியே 25.29-ஆக தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்