காயத்திலிருந்து மீண்டார் தனஞ்சய டி சில்வா

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
219Shares
219Shares
lankasrimarket.com

இலங்கை வீரரான தனஞ்சய டி சில்வா காயத்திலிருந்து மீண்டுள்ள நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் பங்கேற்று விளையாடுவார் என தெரிகிறது.

சிறந்த துடுப்பாட்டகாரராகவும், சூழல் பந்துவீச்சாளராகவும் விளங்கும் தனஞ்சய டி சில்வா இலங்கை அணியின் ஆல்-ரவுண்டராக திகழ்கிறார்.

இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் தனஞ்சய டி சில்வாவுக்கு காயம் ஏற்பட்டது, இதனால் ஓய்வெடுத்து வந்த நிலையில் தற்போது காயத்திலிருந்து மீண்டுள்ளார்.

எனவே வங்கதேசத்துக்கு எதிரான தொடரில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் மோதும் முதற் டெஸ்ட் போட்டி வரும் ஜனவரி 31-ம் திகதி தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்