துணை அணித்தலைவரானார் சுரங்க லக்மால்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்
237Shares
237Shares
ibctamil.com

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணியின் துணை அணித்தலைவராக சுரங்க லக்மால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.

இதற்கான அணியின் துணை அணித்தலைவராக சுரங்க லக்மால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இம் மாதம் 31 ஆம் திகதி முதல் பிப்ரவரி மாதம் 4 ஆம் திகதி வரை சிட்டகொங்கிலும் 2 போட்டி பிப்ரவரி மாதம் 8 ஆம் திகதி முதல் பிப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரை டாக்காவிலும் இடம்பெறவுள்ளது.

தேர்வுக்குழுவின் நியமனத்திற்கு விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அணிவிபரம்

 • தினேஷ் சந்திமால் - அணித் தலைவர்
 • திமுத்த கருணாரத்ன
 • அஞ்சலோ மெத்தியூஸ்
 • தனுஷ்க குணதிலக
 • குஷல் மென்டிஸ்
 • தனஞ்சய டி சில்வா
 • நிரோஷன் டிக்வெல்ல
 • ரோஷேன் சில்வா
 • ரங்கண ஹேரத்
 • சுரங்க லக்மால் - உப தலைவர்
 • டில்ருவான் பெரேரா
 • துஷ்மந்த சாமிர
 • லக்ஷான் சந்தகன்
 • அகில தனஞ்சய
 • லகிரு கமகே
 • லகிரு குமார

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்