இந்தியா- தென் ஆப்பிரிக்கா இரண்டாவது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா சிறப்பான தொடக்கம்

Report Print Raju Raju in கிரிக்கெட்
396Shares
396Shares
ibctamil.com

இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடி வருகிறது.

இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 1-0 என்ற கணக்கில் அந்த அணி முன்னிலை வகிக்கிறது, இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று செஞ்சூரியனில் தொடங்கியுள்ளது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.

அந்த அணியின் தொடக்க வீரர்களாக டீன் எல்கரும், எய்டன் மர்க்ரமும் களமிறங்கினார்கள்.

அபாரமாக விளையாடி வரும் மர்க்ரம் 89 பந்துகளில் 51 ஓட்டங்கள் எடுத்துள்ளார், மறுமுனையில் விளையாடும் டீன் எல்கர் 73 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

தற்போதைய நிலரவரப்படி தென் ஆப்பிரிக்கா 27 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 78 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்