2017ம் ஆண்டுக்கான ICC விருதுகள் அறிவிப்பு

Report Print Gokulan Gokulan in கிரிக்கெட்

2017-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணியின் அணித்தலைவர் விராட் கோஹ்லி 2017ம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசியின் ஓராண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை இந்திய வீரர்கள் தொடர்ந்து பெறுவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன் சென்ற ஆண்டுக்கான சிறந்த கிரிகெட் வீரர் விருதை ரவிச்சந்திரன் அஸ்வின் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

ஐசிசியின் சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியிலும் விராட் கோஹ்லி இடம் பெற்றுள்ளார், இரண்டிலும் அவரே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

T20ல் ஐசிசியின் சிறந்த செயல்திறன் வீரருக்கான விருது இந்திய வீரர் யுவேந்திர சாஹலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுகள் முழு விபரம்

சிறந்த கிரிக்கெட் வீரர் - விராட் கோலி(இந்தியா)

சிறந்த டெஸ்ட் வீரர் - ஸ்டீவ் ஸ்மித்(அவுஸ்திரேலியா)

சிறந்த வளரும் வீரர் - ஹாசன் அலி(பாகிஸ்தான்)

சிறந்த அசோசியேட் வீரர் - ரஷித் கான்(ஆப்கானிஸ்தான்)

T20 வீரர் - யுவேந்திர சாஹல்(இந்தியா)

சிறந்த நடுவர் - மேரிஸ் எராஸ்மஸ்

சிறந்த டெஸ்ட் அணி
 • டீன் எல்கர் (தென் ஆப்பிரிக்கா)
 • டேவிட் வார்னர் (அவுஸ்திரேலியா)
 • விராட் கோலி (கேப்டன்)(இந்தியா)
 • ஸ்டீவ் ஸ்மித் (அவுஸ்திரேலியா)
 • சடெஸ்வர் புஜாரா (இந்தியா)
 • பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
 • குவிண்டன் டீ காக் (விக்கெட் கீப்பர்) (தென் ஆப்பிரிகா)
 • ரவிசந்திரன் அஸ்வின் (இந்தியா)
 • மிட்சேல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)
 • ககிசோ ரபாடா (தென் ஆப்பிரிக்கா)
 • ஜேம்ஸ் ஆண்டர்சன் (இங்கிலாந்து).
சிறந்த ஒருநாள் அணி
 • டேவிட் வார்னர் (அவுஸ்திரேலியா)
 • ரோஹித் சர்மா (இந்தியா)
 • விராட் கோலி (கேப்டன்)(இந்தியா)
 • பாபர் அசாம் (பாகிஸ்தான்)
 • ஏபி டீ வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா)
 • குவிண்டன் டீ காக்(விக்கெட் கீப்பர்) (தென் ஆப்பிரிகா)
 • பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)
 • ட்ரெண்ட் போல்ட் (நியூசிலாந்து)
 • ஹாசன் அலி(பாகிஸ்தான்)
 • ரஷித் கான்(ஆப்கானிஸ்தான்)
 • ஜாஸ்பிரிட் பூம்ரா (இந்தியா).

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்