இலங்கையின் பந்துவீச்சை சிதறடித்த வங்கதேசம்: 320 ஓட்டங்கள் குவிப்பு

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் இழப்புக்கு 320 ஓட்டங்கள் குவித்துள்ளது.

இலங்கை அணி வங்கதேசத்தில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

இந்நிலையில், இன்று டாக்காவில் தொடங்கிய வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில், நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற வங்கதேசம் துடுப்பாட்டத்தைத் துவங்கியது.

அதிரடியாக துவங்கிய வங்கதேச வீரர்கள், இலங்கையின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். துவக்க வீரர் தமிம் இக்பால் 84 ஓட்டங்களும், ஷகிப் அல் ஹசன் 67 ஓட்டங்களும், முஷ்பிகர் ரஹீம் 62 ஓட்டங்களும் குவித்தனர்.

50 ஒவர்கள் முடிவில் வங்கதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 320 ஓட்டங்கள் குவித்தது. இலங்கை அணித்தரப்பில் திசாரா பெரேரா 3 விக்கெட்டும், நுவான் பிரதீப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர், துடுப்பாட்டத்தை துவங்கிய இலங்கை அணியில் குசால் பெரேரா 1 ஒட்டத்தில் ஆட்டமிழந்தார். எனினும், தரங்கா மற்றும் குசால் மெண்டிஸ் முறையே 25, 19 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து வந்த டிக்வெல்லா 16 ஓட்டங்களும், அணித் தலைவர் சண்டிமல் 28 ஓட்டங்களும் மட்டுமே எடுத்து அவுட் ஆகினர்.

தற்போது வரை இலங்கை அணி, 26 ஒவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 117 ஓட்டங்கள் எடுத்து ஆடிவருகிறது. திசாரா பெரேரா 5 ஓட்டங்களுடன் விளையாடி வருகிறார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்