இந்திய கிரிக்கெட் வீராங்கனைக்கு வந்த சோதனை

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஹர்மன்பிரீத் கவுரின் சாதனைகளை பாராட்டி பஞ்சாப் அரசு, பொலிஸ் டி.எஸ்.பி பதவி வழங்குவதாக அறிவித்துள்ளது.

ஹர்மன்பிரீத் கவுர் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த ஆண்டு நடைபெற்ற ஆட்டத்தில் 171 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்தவர்.

மேலும் இந்திய மகளிர் அணி உலகக் கோப்பையின் இறுதி ஆட்டம் வரை செல்ல பெரிதும் பங்காற்றினார்.

இவரின் இந்த சாதனைகளை பாராட்டி, விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீட்டில், மேற்கு ரயில்வேயில் அலுவலக கண்காணிப்பாளர் பதவி அளிக்கப்பட்டது.

அந்த பதவி ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் ஒப்பந்த காலத்திற்கு முன்பாக பணியில் இருந்து விலகினால், ஐந்து ஆண்டுகளுக்கான சம்பளம் முழுவதையும் செலுத்த வேண்டும் என்பது விதி.

இந்நிலையில் பஞ்சாப் அரசு ஹர்மன்பிரீத்திற்கு பொலிஸில் டி.எஸ்.பி பதவி வழங்குவதாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு ஹர்மன்பிரீத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஆனால் அவர் ஒப்பந்தப்படி ஐந்து ஆண்டுகளுக்கான சம்பளமான ரூ.27 லட்சத்தைச் செலுத்தினால் மட்டுமே, ரயில்வே பதவியில் இருந்து முழுமையாக விடுவிக்க முடியும் என்று மேற்கு ரயில்வே கூறியுள்ளது.

தற்போது கடந்த ஐந்து மாதங்களாக சம்பளம் கிடைக்காமல் உள்ள ஹர்மன்பிரீத், பொலிஸ் டி.எஸ்.பி-ஆக பதவியேற்க முடியாத நிலையில் உள்ளார்.

இந்நிலையில் ஹர்மன்பிரீத்தை பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று ரயில்வே அமைச்சருக்கு பஞ்சாப் முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்