சச்சின் மகனை பிரமிக்க வைத்த பந்துவீச்சாளர்கள்

Report Print Kabilan in கிரிக்கெட்
602Shares

இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர், தன்னை பிரம்மிக்க பந்துவீச்சாளர்கள் குறித்து தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன், தற்போது கிரிக்கெட் வீரராக வளர்ந்து வருகிறார். இடக்கை பந்து வீச்சாளர் மற்றும் இடக்கை துடுப்பாட்ட வீரரான இவர், இந்திய அணியில் இடம் பிடிப்பதே தனது லட்சியம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘சிறு வயதில் நான் கால்பந்து, நீச்சல், டேக்வாண்டோ போன்ற பல்வேறு விளையாட்டுகளில் கவனம் செலுத்தி வந்தேன். ஆனால், கிரிக்கெட் அனைத்து விளையாட்டுகளையும் முந்தி விட்டது.

என் அப்பா எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். ஆனால், அவர் ஒருபோதும் என்னைக் கட்டாயப்படுத்தியதில்லை.

ஐ.பி.எல் அணியில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதில் பரிசீலிக்கப்படவே நன்றாக விளையாட வேண்டும். அதோடு, ஓரிரு தொடர்களில் மோசமாக விளையாடினாலும் நீங்கள் அவ்வளவுதான்.

குழந்தைப் பருவத்தில் வேகப்பந்து வீசுவதையே விரும்பியுள்ளேன். ஒரு வேகப்பந்து வீச்சாளர் ஆக வேண்டும் என்பது குறித்து நான் பரிசீலித்துள்ளேன். ஏனெனில், இந்தியாவில் அதிகம் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லை.

அச்சமின்றியும், அணிக்காகவும் விளையாட வேண்டும் மற்றும் விதிமுறைகளை மதிக்க வேண்டும் என்று எனது தந்தை கூறியதே சிறந்த அறிவுரைகள் ஆகும்.

டெஸ்ட் போட்டிகளில் வேகப்பந்து வீசுவதையே விரும்புகிறேன். In-swing மற்றும் Out-swing முறையில் வேகப்பந்து வீச விரும்புகிறேன். டி20 போட்டிகளில் பந்துவீச்சாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் இல்லை.

எனவே, டி20யில் துடுப்பாட்டம் செய்யவே விரும்புகிறேன். ஜாகீர் கான், மிட்செல் ஜான்சன், மிட்செல் ஸ்டார்க் மற்றும் வாசிம் அக்ரம் ஆகியோர் என்னை வியக்க வைத்த பந்து வீச்சாளர்கள் ஆவர்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்