இன்று முதல் டெஸ்ட் போட்டி: இலங்கை நட்சத்திர வீரர் விளையாட மாட்டார் என அறிவிப்பு

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கை - வங்கதேசம் அணிகள் இடையே இன்று தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை நட்சத்திர வீரர் ஏஞ்சலா மேத்யூஸ் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற முத்தொடர் கிண்ணத்தை இலங்கை அணி வென்றது.

இந்நிலையில் இலங்கை - வங்கதேச அணிகள் மோதும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி இன்று வங்கதேசத்தின் சிட்டாகாங் நகரில் தொடங்குகிறது.

முத்தொடரின் முதல் போட்டியில் விளையாடிய இலங்கை வீரர் மேத்யூஸுக்கு அந்த போட்டியின் போது காயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக மற்ற போட்டிகளில் பங்கேற்காத அவர் மருத்துவரின் ஆலோசனை படி இலங்கைக்கு திரும்பினார்.

இந்நிலையில் டெஸ்ட் போட்டியில் மேத்யூஸ் பங்கேற்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், முதல் டெஸ்டில் மேத்யூஸ் பங்கேற்கமாட்டார் என அணி தலைவர் தினேஷ் சண்டிமால் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது போட்டியில் மேத்யூஸ் பங்கேற்பாரா என்பது குறித்து சண்டிமால் எந்தவொரு தகவலையும் தெரிவிக்கவில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers