ஐபிஎல் தொடருக்கு போட்டியாக இலங்கை பிரீமியர் லீக்: இலங்கை கிரிக்கெட் வாரியம்

Report Print Raju Raju in கிரிக்கெட்
358Shares
358Shares
ibctamil.com

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் போன்ற டி20 தொடரை விரைவில் மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போன்றே இலங்கை பீரிமியர் லீக் என்ற டி20 தொடரை இலங்கை கிரிக்கெட் வாரியம் கடந்த 2011-ல் தொடங்கியது.

ஆனால் அந்தாண்டு போட்டி நடைபெறாத நிலையில் 2012-ல் முதல் தொடர் நடைபெற்றது.

ஏழு அணிகள் கலந்து கொண்ட தொடரில் Uva Next என்ற அணி கிண்ணத்தை வென்றது.

பின்னர் 2013-ஆம் ஆண்டின் தொடர், ஊழல், தவறான நிர்வாகம் போன்ற காரணங்களால் நடைபெறவில்லை.

2014-ல் இந்த தொடருக்கு பதிலாக சூப்பர் 4s T20 என்ற தொடர் நடைபெற்றது.

இந்நிலையில் இலங்கை பிரீமியர் லீக் தொடரை மீண்டும் நடத்த இலங்கை வாரியம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து நிர்வாக தலைவர் திலங்க சுமதிபால கூறுகையில், மார்ச் மாதம் இலங்கை, இந்தியா, வங்கதேச அணிகள் பங்குபெறும் சுதந்தர கிண்ண முத்தொடருக்கு பின்னர் இலங்கை பிரீமியர் லீக் தொடரை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

இலங்கை பிரீமியர் லீக் தொடரை மீண்டும் நடத்துவதற்கு சிறந்த நிலைப்பாடு, விதிமுறை எங்களிடம் இருப்பதாக கருதுகிறோம்.

அதற்கு முன்னர் நடக்கும் சுதந்திர கிண்ண தொடர் இதற்கு நல்ல அடித்தளமாக இருக்கும் எனவும் நம்புவதாக கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்