கிரிக்கெட்டில் நடந்த அபூர்வ நிகழ்வு: பழிக்குப்பழி தீர்த்த ஜிம்பாப்வே

Report Print Kabilan in கிரிக்கெட்
661Shares
661Shares
ibctamil.com

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி, கடந்த போட்டியில் தோல்வியடைந்ததை போல, வெற்றி பெற்ற அபூர்வ சம்பவம் நடந்துள்ளது.

ஷார்ஜாவில், ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி, கடந்த 9ஆம் திகதி நடைபெற்றது.

இதில் முதலில் துடுப்பாட்டம் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி, 34.4 ஓவர்களில் 179 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதன் மூலம், ஆப்கானிஸ்தான் அணி 154 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ரஷித் கான் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்நிலையில், இவ்விரு அணிகள் மோதிய 2வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி, 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 333 ஓட்டங்கள் குவித்தது.

அதிகபட்சமாக பிரண்டன் டெய்லர் 125 ஓட்டங்களும், சிகந்தர் ரசா 92 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி, 30.1 ஓவர்களில் 179 ஓட்டங்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம், ஜிம்பாப்வே அணி 154 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஜிம்பாப்வே அணித்தலைவர் க்ரீமர் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி எவ்வளவு ஓட்டங்கள் எடுத்து(333), ஜிம்பாப்வே அணியை எவ்வளவு ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதோ(154), அதே போல இரண்டாவது போட்டியில் ஜிம்பாப்வே அணி அதே ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்