அதிக தூரம் சிக்ஸர் அடித்த வீரர்கள் பட்டியலில் இலங்கை வீரர்

Report Print Santhan in கிரிக்கெட்

கிரிக்கெட் போட்டியில் அதிக தூரம் சிக்ஸர் அடித்த வீரர்களுக்கான பட்டியலில் முதல் ஆறு இடங்களுக்குள் இலங்கை வீரர் இடம்பிடித்துள்ளார்.

தற்போது உள்ள கிரிக்கெட் உலகில் இளம் வீரர்கள் அதிரடியான விளையாட்டை வெளிப்படுத்தி வருகின்றனர், அதிலும் அவர்கள் அடிக்கும் சிக்ஸர்கள் நம்ப முடியாத வகையில் உள்ளன.

இந்நிலையில் கிரிக்கெட் வரலாற்றில் அதிக தூரம் சிக்ஸர் அடித்த ஆறு வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

சிம்மன் ஓ டோனல்

அவுஸ்திரேலியாவின் உள்ளூர் அணியாக உள்ள விக்டோரியா அணியில் இடம் பிடித்துள்ள ஆல் ரவுண்டர் Simon O’ Donnell 6-வது இடத்தில் உள்ளார். இவர் கடந்த 1993-ஆம் ஆண்டு நியூ சவுத் வேல் அணிக்கு எதிரான போட்டியில் 122 மீற்றர் சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ளார்.

திசர பெரேரா

இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரரும், ஆல் ரவுண்டருமான திசர பெரேரா கடந்த 2010-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 போட்டியில் 123 மீற்றர் சிக்ஸர் அடித்து 5-வது இடத்தில் உள்ளார்.

ஆல்பி மோர்கல்

ஐபிஎல் போட்டியில் சென்னை அணிக்காக விளையாடி வந்த தென் ஆப்பிரிக்கா வீரர் ஆல்பி மோர்கல், ஹைதரபாத் அணிக்கு அதிரான ஆட்டத்தில், சுழற்பந்து வீச்சாளர் பிரக்யன் ஓஜா வீசிய ஓவரில் 124 மீற்றர் அடித்து வாயை பிளக்க வைத்ததுடன், அதிக தூரம் சிக்ஸர் அடித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

மார்டின் கப்டில்

நியூசிலாந்து அணியின் துவக்க வீரரான மார்டின் கப்டில், தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியில் 127 மீற்றர் சிக்ஸர் அடித்து சாதனை படைத்துள்ளார். 3-வது இடத்தை பிடித்துள்ள இவர் அந்த போட்டியில் 148 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.

ஆய்டன் பிளிசார்ட்

விக்டோரிய அணி வீரரான ஆய்டன் பிளிசார், வேஸ்டர்ன் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான பிக்பாஸ் டி20 போட்டியில் 130 மீற்றர் சிக்ஸர் அடித்து 2-வது இடத்தை பிடித்துள்ளார்.

பிரட் லீ

கிரிக்கெட் வரலாற்றில் அதிக தூரம் சிக்ஸர் அடித்து முதலிடம் பிடித்துள்ள வீரர் ஒரு பந்து வீச்சாளர் என்றால் நம்ப முடிகிறதா, ஆம் அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான பிரட் லீ கடந்த 2005-ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 143 மீற்றர் அடித்து மிரட்டியுள்ளார். இதுவே கிரிக்கெட் வரலாற்றில் அதிக தூரம் சிக்ஸர் அடித்த முதல் வீரர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்