பந்துவீச்சில் புதிய அவதாரம் எடுத்த 'தல' டோனி

Report Print Samaran Samaran in கிரிக்கெட்
பந்துவீச்சில் புதிய அவதாரம் எடுத்த 'தல' டோனி

தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டிக்கான பயிற்சியின் போது டோனி லெக் ஸ்பீன்னராக பவுலிங் செய்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 6 ஒருநாள், 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று போட்டியிலும் இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

நான்காவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்கா வென்றது, இந்நிலையில் இரு அணிகள் மோதும் ஐந்தாவது ஒருநாள் போட்டி, போர்ட் எலிசபெத்தில் இன்று நடக்கிறது.

இதற்கான இந்திய வீரர்களின் வலைப்பயிற்சியின் போது, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பலவுர்கள் பவுலிங் செய்தனர்.

அப்போது முன்னாள் டோனியும் பவுலிங் செய்தார். எப்போதும் மீடியும் வேகப்பந்துவீச்சை பவுலிங் செய்யும் டோனி, இம்முறை வித்தியாசமாக லெக் ஸ்பின் முயற்சி செய்தார். இந்த வீடியோவை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரப்பி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்