கோஹ்லி-ரகானேவை கடுப்பேத்திய ரோகித்: மைதானத்திற்கு வெளியேற சிக்ஸர் பறக்கு விட்டு அசத்தல்

Report Print Santhan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில் கோஹ்லி மற்றும் ரகானே தேவையில்லாமல் ரன் அவுட்டாகி வெளியேறினர்.

தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய அணி, அந்நாட்டு அணியுடன் 6 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் மூன்று போட்டிகளில் இந்தியாவும், ஒரு போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றுள்ள நிலையில், இரு அணிகளுக்கிடையேயான 5-வது ஒருநாள் போட்டி போர் எழுசபத்தில் நடைபெற்று வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச தீர்மானித்தது. அதன் படி துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் 34 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, ரோகித் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

இதற்கிடையில் இப்போட்டியின் போது ரோகித் பந்தை தடுத்தாடிய போது கோஹ்லி ஓட்டம் எடுக்க அழைத்தார். இருப்பினும் ரோகித் சர்மா வேண்டாம் என கூறவே மீண்டும் திரும்ப கிரீஸுக்கு செல்லும் போது கோஹ்லி தேவையில்லாமல் ரன் அவுட்டாகி வெளியேறினார்.

இந்த ரன் அவுட்டால் கோஹ்லி புலம்பியபடியே சென்றார். கோஹ்லி தான் அப்படி அவுட்டாகிவிட்டார் என்றால் அதே போன்று ரஹானேவும் ரன் அவுட் முறையில் வெளியேற இந்திய வீரர்கள் சற்று கடுப்பாகினர்.

வந்த வீரர்கள் என அனைவரும் வந்த வேகத்தில் வெளியேறினாலும், ரோகித் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் அடித்து அசத்தினார். 126 பந்துகள் சந்தித்த இவர் 115 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

மேலும் ரோகித் இப்போட்டியில் ரபாட வீசிய ஓவரை இறங்கி வந்து சிக்ஸர் அடித்து மைதானத்திற்கு வெளியே பறக்க விட்டார்.

சற்று முன் வரை இந்திய அணி 48.2 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.


மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்