குல்தீப், ரோகித் சர்மா அபாரம்: தென் ஆப்பிரிக்காவை சுளுக்கெடுத்த இந்தியா

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான 5-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நடைபெற்றது. நாணயசுழற்சியில் வென்ற தென்ஆப்பிரிக்கா அணியின் தலைவர் மார்கிராம் பந்துவீச்சை தெரிவு செய்தார்.

இதனையடுத்து தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

ரோகித் சர்மா நிதானமாக விளையாட தவான் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்தியாவின் ஸ்கோர் 7.2 ஓவரில் 148 ஓட்டங்களாக இருக்கும்போது தவான் 23 பந்தில் 8 பவுண்டரியுடன் 34 ஓட்டங்கள் எடுத்து ரபாடா பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ரோகித் சர்மா உடன் விராட் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

ரோகித் சர்மா 50 பந்தில் அரைசதம் அடித்தார். இந்தியாவின் ஸ்கோர் 25.3 ஓவரில் 153 ஓட்டங்களாக இருக்கும்போது விராட் கோஹ்லி ரன்அவுட் ஆனார்.

அவர் 54 பந்தில் 2 பவுண்டரியுடன் 36 ஓட்டங்கள் அடித்தார். அடுத்து வந்த ரகானேவும் 8 ரன்னில் ஆட்டமிழந்தார்.

4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவுடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இருவரும் சிறப்பாக விளையாடினார்கள்.

36-வது ஓவரின் கடைசி பந்தில் இரண்டு ஓட்டங்கள் எடுத்து ரோகித் சர்மா தனது 17-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

அவர் 107 பந்தில் சதம் அடித்தார். 43-வது ஓவரை நிகிடி வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.

அவர் 126 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 115 ஓட்டங்கள் சேர்த்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா தான் சந்தித்த முதல் பந்திலேயே வெளியேறினார்.

45-வது ஓவரை நிகிடி வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஷ்ரேயாஸ் அய்யர் 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்தியா 14 பந்தில் 2 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. அதன்பின் வந்த டோனி 13 ஓட்டங்கள் எடுத்த நிலையில் நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார்.

புவனேஸ்வர் குமார் கடைசி வரை நின்று 19 ஓட்டங்கள் அடிக்க இந்தியா 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 274 ஓட்டங்கள் சேர்த்தது. இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 275 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் நிகிடி 9 ஓவரில் 51 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். இந்தியா கடைசி 10 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 55 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனையடுத்து 276 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க வீரர்கள் ஆம்லா(71) மற்றும் மார்க்ராம்(32) அசத்தலான தொடக்கத்தை அளித்தனர்.

ஆனால் அதனை அடுத்து வந்த டுமினி(1) மற்றும் டிவில்லர்ஸ்(6) சொதப்ப, மில்லர்(36) மற்றும் கிளாசன்(39) ஆகிய இருவரும் அணியின் வெற்றிக்கு உறுதியாக செயல்பட்டனர்.

இருப்பினும் அடுத்து வந்த வீரர்கள் எவரும் சோபிக்காத நிலையில் 42.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தென்னாப்பிரிக்கா அணி 201 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது.

இதனால் தென்னாப்பிரிக்கா மண்ணில் முதன் முறையாக ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வென்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்