ரோகித்சர்மாவின் இந்த அரிய சாதனை தெரியுமா?

Report Print Arbin Arbin in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மாவால், விராட் கோஹ்லி ரன் அவுட் ஆகும்போதெல்லாம் ரோகித்சர்மா ரன் வேட்டை ஆடியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணியுடனான கடந்த 4 போட்டிகளில் 20,15,0,5 என வெறும் 40 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து மோசமான பார்மில் இருப்பதாக விமர்சிக்கப்பட்டார் ரோகித் சர்மா.

இதனிடையே 5-வது ஒரு நாள் போட்டியில் 115 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் மீண்டும் தான் டான் ரோகித் சர்மா என்பதை உணர்த்தியுள்ளார். ரோகித் சர்மா விளாசும் 17வது சதம் இதுவாகும். வெளிநாட்டில் ரோகித் அடிக்கும் 10வது சதம் என்ற பெருமையோடு, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக இரண்டாவது சதம் இதுவாகும்.

இது இவ்வாறு இருக்க ரோகித் சர்மாவால், விராட் கோஹ்லி ரன் அவுட் ஆகும்போதெல்லாம் ரோகித்சர்மா அதிக ஓட்டங்கள் குவித்தது தெரிய வந்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடிய ஆட்டத்தில் கோஹ்லியை ரன் அவுட்டாக்கிய ரோகித் சர்மா, அந்த போட்டியில் 57 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

இதே போன்று 2013 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 209 ஓட்டங்கள் குவித்துள்ளார்.

2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 264 ஓட்டங்கள் குவித்தார்.

மீண்டும் 2016 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கோஹ்லியை ரன் அவுட்டாக்கிய ரோகித் சர்மா, அதே ஆட்டத்தில் 124 ஓட்டங்கள் குவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்