இந்தியாவை தோற்கடிக்குமா தென் ஆப்பிரிக்கா? வீரர்களுக்கு டுமினி அட்வைஸ்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியா அணிக்கு எதிரான தோல்விகளிலிருந்து மீண்டு வர வேண்டும் என வீரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் தென் ஆப்பிரிக்கா அணியின் தலைவர் டுமினி.

தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

டெஸ்ட் தொடரில் அசத்திய தென் ஆப்பிரிக்கா அணி, ஒருநாள் போட்டிகளில் அதற்கு எதிர்மறையாக விளையாடியது.

தென் ஆப்பிரிக்கா மண்ணில் இந்திய அணி இப்படி அசத்தி வருவதால், அடுத்து நடைபெறவுள்ள டி20 போட்டிகளில் நிச்சயம் வெல்ல வேண்டும் அப்படி தோல்வியடைந்தால், சொந்த மண்ணிலே தொடரை இழந்த அணி என்று அசிங்கப்பட நேரிடும்.

இந்நிலையில் டி20 தொடருக்கான தென் ஆப்பிரிக்கா அணியின் தலைவர் டுமினி கூறுகையில், இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் துடுப்பாட்டம் மோசமாக அமைந்தது.

அதிலும் ரிஸ்ட் ஸ்பின்னர்களை எதிர்கொள்ள முடியாமல் தென் ஆப்பிரிக்க துடுப்பாட்ட வீரர்கள் வீழ்ச்சி கண்டிருந்தனர்.

ஒரு நாள் போட்டியில் தான் அப்படி பார்த்தால், டி20 தொடரிலும் தோல்வி முகம் தான் உள்ளது.

இது ஒரு துரதரிஷ்டவசமானது, துடுப்பாட்டத்தில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதற்கு வீரர்கள் மற்றும் சீனியர் துடுப்பாட்ட வீரர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

ண்ணாடியின் முன் நின்று கொண்டு நாம் எப்படி முன்னேற முடியும், எப்படி சிறப்பாக செயல்பட முடியும் என தங்களுக்குள்ளே வீரர்கள் கேட்டுக் கொள்ள வேண்டும்.

அடுத்த ஆட்டத்தில் மீண்டு வருவதற்கான வழிகளை கண்டறிய வேண்டுமே தவிர, இதில் இருந்து மறைந்தால் ஒன்றும் ஆகப் போவதில்லை, முன்னால் வந்துதான் ஆக வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் தென் ஆப்பிரிக்கா அணியில் சீனியர் வீரர்களான டுபிலிசிஸ், டிவில்லியர்ஸ் போன்றோர் முதல் டி20 போட்டியில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்