இலங்கையில் நடைபெறும் முத்தரப்பு தொடர்: இந்திய வீரரின் கனவு நிறைவேறுமா?

Report Print Santhan in கிரிக்கெட்
550Shares

இலங்கையில் நடைபெறவுள்ள முத்தரப்பு டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கான ஒருநாள் அணியில் இடம் பிடிப்பேன் என்று ஜெயதேவ் உடன்கட் கூறியுள்ளார்.

இலங்கை, வங்கதேசம், இந்தியா ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி20 தொடர் இலங்கையில் வரும் 6-ஆம் திகதி துவங்கவுள்ளது. இத்தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி, இலங்கை புறப்பட்டது.

இந்திய அணியில் கோஹ்லி, டோனி போன்றோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான உடன்கட், இத்தொடரில் நிச்சயமாக சாதித்தால், இந்திய ஒருநாள் அணியில் கண்டிப்பாக இடம்பிடிப்பேன். மத்தியில் வீசும் ஓவர்களில் விக்கெட் கைப்பற்றி தலைவர் மற்றும் அணி நிர்வாகத்துக்கு நம்பிக்கை ஏற்படுத்துவேன் என்று கூறியுள்ளார்.

மொத்தமாக 7 போட்டிகள் கொண்ட இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோதும். 6 லீக் போட்டியின் முடிவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி, இறுதி போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்