டி20 முத்தொடர்: இலங்கைக்கு புறப்பட்டது இந்திய அணி

Report Print Raju Raju in கிரிக்கெட்

டி20 முத்தொடரில் பங்கேற்பதற்காக இந்திய கிரிக்கெட் அணி இலங்கைக்கு புறப்பட்டு சென்றுள்ளது.

இலங்கை, இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதும் சுதந்திர கிண்ண டி20 தொடர் நாளை கொழும்புவில் தொடங்கவுள்ளது.

தொடரானது வரும் 18-ஆம் திகதி முடிவடைகிறது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் கோஹ்லி மற்றும் டோனிக்கு ஒய்வளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ரோகித் சர்மா அணித்தலைவராக செயல்படவுள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியினர் நேற்று மாலை இலங்கைக்கு புறப்பட்டு சென்றனர்.

இந்த தொடரில் அனுபவம் இல்லாத பல இளம் வீரர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்