மைதானத்தில் தமிழில் உரையாடிய வீரர்கள்: குழம்பி போன அணித்தலைவர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கையில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில், இந்திய வீரர்கள் தினேஷ் கார்த்திக் மற்றும் விஜய் சங்கர் தமிழில் உரையாடியது வைரலாகியுள்ளது.

இலங்கையில் நடந்து வரும் முத்தரப்பு தொடரில் இந்தியா, வங்கதேச அணிகள் மோதிய டி20 போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில், வங்கதேச அணி நிர்ணயித்த 140 ஓட்டங்கள் இலக்கை இந்திய அணி 18.4 ஓவரிலேயே எட்டி வெற்றி பெற்றது.

முன்னதாக, இந்திய அணி பந்துவீச்சில் ஈடுபட்டிருந்த போது, வாஷிங்டன் சுந்தர் பந்து வீசினார். அப்போது, பீல்டிங்கில் நின்றிருந்த விஜய் சங்கர் ‘டேய் right-ல போடாதடா’ என சுந்தரிடம் கூறினார்.

Reuters
AFP

அதற்கு கீப்பிங் செய்து கொண்டிருந்த தினேஷ் கார்த்திக், ‘அவன் சொன்னா கேட்க மாட்டேங்குறான்டா’ என்று பதிலளித்தார். அதன் பிறகு வாஷிங்டன் சுந்தர் left side-யில் பந்து வீசினார்.

AP

இவர்களின், இந்த உரையாடலைப் பார்த்துக் கொண்டிருந்த ரோஹித் ஷர்மாவுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் வெறுமனே குழம்பிப் போய் நின்று கொண்டிருந்தார்.

தமிழகத்தைச் சேர்ந்தவர்களான தினேஷ் கார்த்திக், விஜய் சங்கரின் இந்த உரையாடல் வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers