இலங்கை முத்தொடரில் கலக்கி வரும் தமிழன் யார் தெரியுமா? சுவாரசிய தகவல்

Report Print Raju Raju in கிரிக்கெட்

இலங்கையில் நடைபெற்று வரும் முத்தொடரில் இந்திய அணி சார்பில் கலக்கி வரும் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் சென்னையில் வசிக்கிறார் என தெரியவந்துள்ளது.

27 வயதான விஜய் சங்கர் இலங்கைக்கு எதிரான முதல் போட்டியிலேயே விக்கெட்களை கைப்பற்றியிருக்க வேண்டும்.

ஆனால் பீல்டர்கள் விட்ட கேட்சுகளால் அது முடியாமல் போன நிலையில் அப்போட்டியில் வெறும் 15 ஓட்டங்கள் மட்டுமே விட்டுகொடுத்தார்.

இந்நிலையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நான்கு விக்கெட்களை வீழ்த்தி விஜய் சங்கர் அசத்தினார்.

சென்னை மடிப்பாக்கத்தில் வசிக்கும் விஜய் சங்கருக்கு சிறுவயதிலிருந்தே கிரிக்கெட் என்றால் உயிர்.

மகனின் ஆசையை நிறைவேற்ற அவரது அப்பா வீட்டு மொட்டை மாடியிலேயே நெட் கட்டி கொடுத்தார்.

இதையடுத்து விஜய் கடுமையான பயிற்சி எடுக்க தொடங்கினார். பிறகு சின்ன சின்ன போட்டிகள் என 2013-ல் ரஞ்சியில் ஆட வாய்ப்பு வந்தது.

விளையாடிய மூன்று போட்டியிலும் சதமடித்து அசத்தினார் விஜய்.

2014-15ல் ரஞ்சி போட்டியிலும் 577 ஓட்டங்கள் குவித்த விஜய்க்கு இந்திய ஏ அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

அதிலும் சிறப்பாக அவர் செயல்பட்டார். இந்நிலையில் கடந்தாண்டு இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விஜய் சேர்க்கப்பட்டார்.

ஆனால் ஆடும் 11 பேரில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதையடுத்து தற்போது இலங்கையில் நடந்து வரும் முத்தரப்பு தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி விஜய் தற்போது அசத்தி வருகிறார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers