அதிவேக சதம் விளாசிய வீரர்: தொடரை வென்ற இங்கிலாந்து

Report Print Kabilan in கிரிக்கெட்

கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில், இங்கிலாந்து வீரரின் அதிவேக சதத்தினால் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்களுக்கு இடையேயான, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, பந்து வீச்சை தெரிவு செய்தது. இதனைத் தொடர்ந்து துடுப்பாட்டத்தை துவங்கிய நியூசிலாந்து அணியில், தொடக்க வீரர் கப்தில் 68 பந்துகளில் 47 ஓட்டங்கள் எடுத்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த கேன் வில்லியம்சன், லாதம் ஆகிய முன்னணி வீரர்கள், சொற்ப ஓட்டங்களில் அவுட் ஆகினர். எனினும், ஹென்றி நிக்கோலஸ் 55 ஓட்டங்களும், சாண்ட்னர் 67 ஓட்டங்களும் எடுக்க, நியூசிலாந்து அணி 49.5 ஓவரில் 223 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

AFP Photo/Marty MELVILLE
AP

இங்கிலாந்து தரப்பில் வோக்ஸ், ரஷீத் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், டாம் கரன் 2 விக்கெட்டும், மொயின் அலி மற்றும் மார்க் வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான, ஜானி பேர்ஸ்டோ மற்று ஹேல்ஸின் அதிரடி ஆட்டத்தினால் 20 ஓவரிலேயே 150 ஓட்டங்களை அந்த அணி கடந்தது.

ஹேல்ஸ் அதிரடியாக 61 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் நியூசிலாந்தின் பந்து வீச்சை துவம்சம் செய்த பேர்ஸ்டோ, 58 பந்துகளிலேயே சதம் அடித்து அசத்தினார்.

இது அவருக்கு 3வது அதிவேக சதமாகும். அதன் பின்னர், 6 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 104 ஓட்டங்கள் குவித்த பேர்ஸ்டோ ஆட்டமிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி 32.4 ஓவரிலேயே 3 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜோ ரூட் 23 ஓட்டங்களுடனும், ஸ்டோக்ஸ் 26 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம், ஒருநாள் தொடரை 3-2 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியுள்ளது. பேர்ஸ்டோ ஆட்டநாயகன் விருதும், வோக்ஸ் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...