இலங்கை கிரிக்கெட் வீரர் கைது: காரணம் என்ன?

Report Print Kabilan in கிரிக்கெட்
458Shares
458Shares
lankasrimarket.com

இலங்கை கிரிக்கெட் வீரர் ரமித் ரம்புக்வெல்லா இரண்டு பல்கலைக்கழக மாணவர்களை அடித்த குற்றத்திற்காக சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை அணிக்காக, இரண்டு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளவர் ரமித் ரம்புக்வெல்லா.

இவர், நாரஹேன்பிட் பகுதியில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்களை அடித்ததாகவும், துப்பாக்கியை காட்டி அவர்களை மிரட்டியதாகவும் கூறி பொலிசார் ரமித்தை கைது செய்துள்ளனர்.

ரமித், இதற்கு முன்பும் கடந்த 2016ஆம் ஆண்டு, கொழும்பில் மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இவர், இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

AFP

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்