இந்திய அணி டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாட பிசிசிஐ எடுத்திருக்கும் முடிவு

Report Print Kabilan in கிரிக்கெட்
302Shares
302Shares
lankasrimarket.com

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பாக, டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடும் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது.

இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை, 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதனைத் தொடர்ந்து, வருகிற ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்நிலையில், டெஸ்ட் தொடருக்கு முன்பாக டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடும் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. பி.சி.சி.ஐ-யின் தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி இது குறித்து கூறுகையில்,

அணி நிர்வாகத்தின் கருத்துக்களுக்கு பிறகு, நாங்கள் தீவிரமான முடிவுகளை எடுத்துள்ளோம். அதன்படி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி, அந்த அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.

ஆனால், அதற்கு முன்பாக குறைந்த ஓவர் போட்டிகளான டி20 மற்றும் ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடும். இதன்மூலம், டெஸ்ட் தொடரில் தீவிரமாக விளையாடுவதற்கு ஏற்றவாறு வீரர்கள், தங்களை நன்கு தயார்படுத்திக் கொள்வார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்