3 ஆண்டுகளுக்கு பிறகு சாதித்து காட்டிய டிவில்லியர்ஸ்: வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா

Report Print Kabilan in கிரிக்கெட்
435Shares
435Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக போர்ட் எலிசபெத்தில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க வீரர் டி வில்லியர்ஸ் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

தென் ஆப்பிரிக்கா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி, போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வருகிறது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலியா, முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தது.

அதன்படி தனது முதல் இன்னிங்ஸை ஆடிய அவுஸ்திரேலியா 243 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக வார்னர் 63 ஓட்டங்கள் சேர்த்தார்.

AP:Michael Sheehan

தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் ரபாடா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்க அணியில், டீன் எல்கர் 57 ஓட்டங்களும், ஆம்லா 56 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

நேற்றைய 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில், தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 263 ஓட்டங்கள் எடுத்திருந்தது. டி வில்லியர்ஸ் 74 ஓட்டங்களுடனும், பிலாண்டர் 14 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, 3ஆம் நாள் ஆட்டம் இன்று துவங்கியது. தொடர்ந்து ஆடிய பிலாண்டர் 36 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய டி வில்லியர்ஸ், டெஸ்ட் அரங்கில் தனது 22-வது சதத்தினை அடித்தார்.

இதற்கு முன்பு அவர், கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சதம் அடித்திருந்தார். அதன்பின் மூன்று ஆண்டுகள் கழித்து அவர் அடித்துள்ள சதம் இதுவாகும்.

டி வில்லியர்ஸ் சிறப்பாக விளையாடிய போதும், மறுமுனையில் வந்த வீரர்கள் ஆட்டமிழந்ததால் தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 382 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது.

146 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 20 பவுண்டரிகளுடன் டி வில்லியர்ஸ் 126 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அவுஸ்திரேலியா தரப்பில், கம்மின்ஸ் 3 விக்கெட்டும், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ் ஆகியோர் 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். 139 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் அவுஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்