வங்கதேசம் அணியுடன் வாங்கிய அடி: மோசமான சாதனையை படைத்த இலங்கை

Report Print Santhan in கிரிக்கெட்
777Shares
777Shares
lankasrimarket.com

வங்கதேச அணிக்கு எதிரான தோல்வியின் மூலம் இலங்கை அணி 50 போட்டிகளில் தோல்வியடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.

இலங்கையில் சுதந்திரக் கிண்ணம் முத்தரப்பு டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இலங்கை-வங்கதேசம் அணிகள் மோதின.

214 ஓட்டங்கள் குவித்த இலங்கை அணி வெற்றி பெற்றுவிடும் என்று எதிர்பார்த்த போது, புயலாக மாறி வங்கதேச அணிக்கு வெற்றியை தேடித் தந்தார் முஸ்தபிகுர் ரஹீம். இவர் 35 பந்துகளில் 72 ஓட்டங்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

19.4 ஓவரில் 215 ஓட்டங்களை எட்டி பிடித்து வங்கதேச அணி வரலாற்று சாதனையில் இடம் பிடித்தது.

இந்நிலையில் இந்த தோல்வியின் மூலம் டி20 போட்டியில் 50 தோல்விகளை அடைந்த முதல் அணி என்ற மோசமான சாதனையைப் இலங்கை படைத்துள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்