மீண்டும் ஒரு குற்றச்சாட்டில் சிக்கிய தென் ஆப்பிரிக்க வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்
343Shares
343Shares
lankasrimarket.com

தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா, போர்ட் எலிசபெத் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஐசிசி விதிமுறையை மீறும் வகையில் நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்கு டெஸ்ட்கள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது.

டர்பனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், வார்னர் மற்றும் டி காக் வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து, இரு அணி தலைவர்களையும் அழைத்த ஐ.சி.சி நடுவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

மேலும், இதுபோன்ற மோதல்களில் ஈடுபடக் கூடாது என நடுவர்கள் மற்றும் இரு அணிகளின் நிர்வாகங்களும் கண்டிப்புடன் கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், போர்ட் எலிசபெத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில், தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ரபாடா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும், இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளும் வீழ்த்தி அசத்தினார்.

முன்னதாக, ரபாடா முதல் இன்னிங்ஸில் ஸ்மித் விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில், அவரை இடித்துள்ளார். இதனால் கண்டனத்திற்கு ஆளான ரபாடா மீது, விதிமுறை 2-ஐ மீறியதாகக் கூறி 3 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட உள்ளது.

ரபாடா ஏற்கனவே ஐந்து டிமெரிட் புள்ளிகள் பெற்றுள்ள நிலையில், 2வது இன்னிங்ஸில் வார்னரை அவுட் ஆக்கிய மகிழ்ச்சியில் அவரின் முகத்தின் முன்பே சென்று, தனது எதிர்ப்பை வெளிக்காட்டியுள்ளார்.

இது Level-1 குற்றமாகும். இதற்கும் சேர்த்து அவருக்கு மேலும் ஒரு புள்ளி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு, ரபாடாவின் தடை குறித்து அறிவிக்கப்பட உள்ளது. அவருக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

REUTERS

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்